இஸ்ரோவின் கதையை ஏன் கேட்க வேண்டும்?
இஸ்ரோவின் கதை ஒரு பார்வை..!
ஒரு சிறந்த படைப்பு தனக்கான வாசகர்களையும், ரசிகர்களையும் அதுவே உருவாக்கிக்கொள்ளும் என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் நண்பர் ஹரிஹரசுதன் எழுதியிருக்கும் “இஸ்ரோவின் கதை” புத்தகம்.
தன்னுடைய முதல் ராக்கெட்டை சைக்கிளில் வைத்து எடுத்து சென்ற இஸ்ரோ.. இன்று அண்டை நாடுகளின் செயற்கை கோள்களை ஏவிக்கொடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறதென்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக இந்தியா சிந்திய வியர்வையும் ரத்தமும் மிக அதிகம். துரோகங்களுக்கு மத்தியில் துடிதுடித்து தத்தி தவழ்ந்து எழுந்து நின்று வானூர்தி ஓட்ட கற்றுக்கொண்ட ஒரு குழந்தைபோல் தலை நிமிர்ந்து நிற்கிறது.
தமிழ் இலக்கிய சூழலில் இந்த அளவுக்கு ஒரு அறிவியல் புத்தகம் வெளியாகியுள்ளதா எனத் தெரியவில்லை. இப்படி ஒரு புத்தகத்தை எழுதிய ஹரிக்கு நன்றி சொல்வதோடு மட்டுமல்லாமல், இப்புத்தகத்தை நம்மால் முடிந்தவரை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான் அவரின் எழுத்துக்கும், இஸ்ரோவிற்காக உழைத்த தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும். அதனால், அதை என்னிலிருந்து துவங்கலாம் என எண்ணி, பள்ளி மாணவர்களுக்கு வாங்கி பரிசளிக்க திட்டமிட்டுள்ளேன். ஏனெனில், இப்புத்தகத்திற்கு இன்னும் பல அப்துல் கலாம்களையும், விக்ரம் சாராபாயையும், மயில்சாமி அண்ணாதுரையையும், ஹோமி பாபாக்களையும் உருவாக்கும் சக்தி இருக்கிறது. அந்த பாய்ச்சலில் ஒரு சிறு பொறியாக இருக்கவேண்டும் என பேராசைப்படுகிறேன்.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை, ரூ.180 மட்டும் தான். நீங்களும் இப்புத்தகத்தை இளம் தலைமுறையினருக்கு பரிசளியுங்கள். நட்சத்திரங்களின் மொழிகளை நம் நட்சத்திரங்கள் படித்திட அது அச்சாரமிடட்டும்.
இஸ்ரோவின் கதை புத்தகம் பற்றிய என்னுடைய பார்வைக்கு இந்த வீடியோவை பாருங்கள். நன்றி!
Video Link: https://www.youtube.com/watch?v=2EnYtbgaMs4
👏👏👏👏👌👌
ReplyDelete