அன்னமிட்ட கை
என்னையும் மீறி எனக்கு சில எதிர்மறை எண்ணங்கள் வந்துபோகும். அது பெரும்பாலும் நெருங்கியவர்களின் இறப்பாக இருக்கும். அதுபோன்ற எண்ணங்கள் உதிக்கும்போதெல்லாம் "இல்லை அவ்வாறு நடக்கக் கூடாது" என்று மனதுக்குள் வேண்டிக்கொள்வேன். அப்படி சமீபத்தில் வந்துபோன எதிர்மறை எண்ணம் கார்த்தியின் அம்மா இறந்துவிட்டார் என்ற செய்தி. இந்தத் தகவலை யாரோ எனக்கு தொலைபேசி சொல்வதாக அந்த எண்ணம் தோன்றி மறைந்தது. இல்லை... இது நடக்கக்கூடாது. கார்த்தியின் அம்மாவுக்கு மண்ணுலகைவிட்டுப் பிரியும் வயது கிடையாது என்று உறுதியாய் மனதில் நிலைநிறுத்திக்கொண்டேன். ஆனால், இயற்கையின் விதிக்கு முன்னால் அற்ப மனிதன் நான் என்ன செய்துவிட முடியும்? எல்லாம் முடிந்துவிட்டது. கடந்த ஏழாம் தேதி மாலை நண்பன் ஒருவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "கார்த்தியோட அம்மா இறந்துட்டாங்களாம்டா" என்றான். எனக்குள் தோன்றி மறைந்த அந்த எண்ணம் உண்மையாகிவிட்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக கிளம்புகிறேன் என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தேன். கார்த்தியும் அழைத்து தகவலைச் சொன்னான். எப்படி ஆச்சு.. ஈவ்னிங் ...