அந்த சட்டை:-
மிகுந்த குழப்பத்தில் திரிந்துகொண்டிருந்தான் மோகன். எங்கே போயிருக்கும்..? அப்படி என்ன நாம் தவறாக சொல்லிவிட்டோம். வழக்கமாக பேசுவதைக் காட்டிலும் கொஞ்சம் ஓவராகிவிட்டது இன்று. அதுக்காக என்னை விட்டு போய்விடுவதா? இப்போ இண்டர்வியூக்கு கிளம்பனுமே? பரபரப்பில் இருந்த மோகனுக்கு மெட்ரோ நகரத்தின் சத்தங்கள் கூடுதலாக எரிச்சலூட்டின. எல்லோருக்கும் அவரவர் பயன்படுத்தும் பொருட்களில் சிலவற்றில் மட்டும் ஒரு அலாதியான பிரியம் இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு சட்டைதான் அது. கல்லூரியில் உடன் படித்த மஞ்சுவின் நினைவாக வைத்திருந்தான். அது ராசியான சட்டையா என்று கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த சட்டை அவனுக்கு மிகவும் பிடிக்கும். சிவப்பு நிறத்துணியில் வெள்ளை நிறத்தில் சின்ன சின்னதாய் வெக்டார் குறிகள் இடப்பட்ட டிசைன் அது. வானத்து வின்மீன்கள் அனைத்தும் தன் ரத்ததில் கலந்து தன்னுடனே பயணிப்பது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்படும். அது மிகவும் பிடித்த சட்டை என்பதால், சென்னைக்கு வந்து நண்பனின் மேன்ஷனில் தங்கி, அவன் சென்ற நான்கைந்து நேர்க்கணல்களுக்கும் அதையே அணிந்து சென்றான். ஆனால் எதிலும் வேலை கிடைக்கவி...