Posts

Showing posts from November, 2025

Zombies vs India

இரண்டு வாரங்களுக்கு முன்பு செபி விருது விழாவுக்கு மும்பை சென்றேன். அப்போது ராகேஷ் ஜுஞ்ஜுன்வாலாவின் Low cost airline-ல் பயணித்தது குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு அது thread-ல் விரிந்து சென்றவுடன் பலரும் என்னை வந்து திட்டித் தீர்த்தார்கள். அடுத்தவர்களை திட்டுவதற்காகவே உருவாக்கப்பட்ட தளம்போல் threads தோன்றியது. பேசாமல் அதை thread என்று வைப்பதற்கு பதில் thitts என்று வைத்திருக்கலாம் போல. சரி.. என்ன நடந்தது? நான்காயிரத்து சொச்ச ரூபாய்க்கு டிக்கெட் முன்பதிவு செய்து நானும் மோகனும் மும்பைக்குச் சென்றோம். இரண்டுபேருக்கும் சேர்த்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கு நெருக்கமாய் பயணக்கட்டணம் இருந்தது. ஆகாஸா விமானத்தில் பயணிக்கப்போகிறோம் எனும்போதே ராகேஷ் மிகக்கம்மியான விலையில் விமான சேவையைக் கொடுக்கப் போகிறேன் என்று வந்தாரே எப்படி இருக்கும் அந்த சர்வீஸ் என்ற ஆர்வம் துளிர்த்தோடியது. ஆனால் நிலைமை தலைகீழ்தான். "Enjoy Your Legroom facility" என்று அழகாக பயணச்சீட்டில் போட்டு வைத்திருக்கிறார்கள். உள்ளே போய் அமர்ந்தால், விழுப்புரம் செல்லும் மூன்று சீட்டு பேருந்தில் முன் சீட்டில் முட்டியை முட்டுக்க...