Posts

Showing posts from September, 2025

விதியின் முடிச்சு

Image
  ” ஆறு .. ஏழு .. ஹ்ம்ம் .. பதினொன்னு .. அப்பா உனக்கு பதினோரு முடி நரச்சி போச்சிப்பா . நீயும் தாத்தா மாதிரி ஆகிடுவியா ?” என்று தோளில் உட்கார்ந்து கொண்டு தகப்பனின் தலையை பீராய்ந்துகொண்டிருந்த மேகலா கேட்டாள் . ” இல்ல .. அப்பாவுக்கு வெள்ளிக்கம்பி வர ஆரம்பிச்சிருக்கு .. அதெல்லாம் எடுத்து முறுக்கி உனக்கு வெள்ளி கொலுசு செஞ்சி போடுவேன் ..” ஹைய்ய் .. அப்போ தாத்தாவுக்கு இருக்க வெள்ளிக்கம்பியெல்லாம் சேர்த்தா வெள்ளியிலயே கொலுசு , ஒட்டியாணம் எல்லாம் போடலாம் போலருக்கே ..”   என்று அவள் கிண்டலடித்ததும் இரண்டு கைப்பட்டைகளையும் பிடித்து கீழே இறக்கி .. " இந்த பாரு .. உனக்கு வெள்ளி கொலுசு வேணுமா ? வேண்டாமா ? என்றான் ராமலிங்கம் . ” வேணும் ... அப்போ அப்பா சொல்றத அப்டியே கேட்டுக்கணும் .. குறுக்க பேசக்கூடாது .. ஹ்ம்ம் ..” என்று கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும் தோளில் தூக்கிக்கொண்டான் . பதினோரு முடி வெள்ளையாகிட்டுன்னா .. நமக்கு வயசாக ஆரம்பிச்சுடுச்சு . இன்னும் பொண்ணுக்கு எதுவும் சேர்க்க துவங்கவில்லையே என்ற சிந்தனை ஓடத்...