”தலித் அரசியல்” லப்பர் பந்து அடித்த சிக்ஸர்
சமீபத்தில் லப்பர் பந்து திரைப்படம் தொடர்பான சில எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்தேன். அதில் அரசியல் தலித்துகளை தியாகிகளாக்கும் வன்முறையை இயக்குனர் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, தலித் இளைஞராக வரும் ஹரிஷ் கல்யாண், தாங்கள் தோற்றுப்போனால் அந்த மைதானத்தில் இனிமேல் கிரிக்கெட் ஆடமுடியாது என்று ஒப்பந்தம் போடப்பட்ட பின்னரும் தாங்களாகவே தோற்றுப்போய் தியாக மனப்பான்மையுடன் காட்டிக்கொள்வதுபோல் படம் நிறைவடைவது ஏற்புடையது அல்ல. அந்த போட்டியில் வெற்றிபெறுவதுபோல் காட்சி அமைத்திருந்தால் மட்டுமே, அவர்களின் போராட்டத்திற்கு நியாயம் கிடைத்திருக்கும் எனவும், தியாகிகளாய் இந்த சமூக வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டவர்கள் எல்லோருமே போராட முயன்று பின் தியாகி பட்டம் சூட்டப்பட்டவர்கள் என்றும், அந்த அடைப்புக்குள் அரசியல் தலித்துகளை நிறுத்துவதன் மூலம், தலித் அரசியலிலிருந்து மிக லாவகமாக தலித்துகளைப் பிரித்து ஒதுக்கிவைக்கும் வன்முறையை இப்படம் செய்திருக்கிறது என்பதும் அந்த விமர்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள். இந்த விமர்சகர்கள் எந்த புள்ளியில் நின்று தலி...