மாண்புமிகு மாணவன்:-
அகில இந்திய வானொலியில் தேர்வு செய்யப்பட்ட புதிதில் மோகனகிருஷ்ணன் சார் எங்கள் எல்லோரையும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களாகவே பாவிப்பார். கலங்கரைவிளக்கத்துக்கு அருகில் உள்ள தேநீர் கடையில் முப்பது பேர் தேநீர் குடிப்போம். அந்த முப்பது தேநீரையும் அவரேதான் வாங்கித்தருவார். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. பல நாட்கள் இப்படித்தான் நடந்திருக்கிறது. அவர் ஒரு பாஸ் என்ற பயமே எங்களுக்கு இருக்காது. அவ்வளவு அன்பானவர், எப்போதும் மரியாதைக்குரியவ ர். ஒவ்வொருவரின் தனித்திறமைகளையும் நுட்பமாக கவனித்து அதை மேம்படுத்த ஊக்கப்படுத்துவார். குறைகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் கண்டிப்பார். MGM என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவருக்கு நான் வைத்த செல்லப்பெயர் SPB. அழகாகப் பாடுவார்..அதில் SPB யின் சாயல் இருக்கும். உருவத்திலும் குணத்திலும் SPBஐ ஒத்தவர்தான் அவர். அவருடைய அன்பைப் பற்றி தமிழ்ப்பிரபா ஒருமுறை இப்படி எழுதினான் "சார்.. எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு.. உங்கள கத்தியால குத்தி கொலை பண்ண போறேன் சார்" என்று சொன்னால் கூட.. "பாத்துப்பா.. கத்திய ஒழுங்கா பிடி, கையில கிழிச்சிடப்போவுது" என்று அன்ப...