Posts

Showing posts from August, 2023

மாப்பிள்ளை வீரனும் நானும்..!

Image
 மாப்பிள்ளை வீரனும் நானும்..!  இன்று (02-08-2023) மாப்பிள்ளை வீரன் கோவிலுக்குச் சென்றோம். திருவிழா நேரத்தில்தான் அதிகமாக சென்றிருக்கிறேன். திருவிழா இல்லாத நாட்களின் ஊர்த்தெய்வங்கள் அதன் சுய வாழ்க்கை தம் இஷ்டத்திற்கு வாழும் என நினைக்கிறேன். மனிதர்கள் சமூக வலைதளங்களிலிருந்து கொஞ்சம் விலகுவதைப்போல. மாப்பிள்ளை வீரன் அதே மீசை முறுக்குடன் மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார். மதிய நேரம் என்பதால் திருமேனி அம்மன் இளைப்பாற கதவை சாத்திக்கொண்டது. அதனால் வீட்டு தென்னையிலிருந்து பறித்துக்கொண்டு வந்த தேங்காயை வாசலில் உடைத்து கொடுத்தார் பூசாரி. வீரனுக்கு தேங்காய் உடைத்து, ஆராதனை செய்து வணங்கினோம். கைக்குழந்தையாக இருந்தபோதிலிருந்தே அந்த கோவிலுக்கு போவேன். அம்மாவின் பூர்வீகம் தகட்டூர் என்பதால் ஒவ்வொரு வருடமும் திருவிழாவுக்கு தவறாமல் சென்றுவிடுவோம். ஆனால் திருவிழா இல்லாத ஒரு மதிய நேரத்தில், கூட்டமே இல்லாத கோவிலுக்கு சென்றது மிக நல்ல அனுபவம். நாங்கள் உள்ளே போகும்போது "இந்த வருஷம் புதுசா ரெண்டு மூணு குதிரை வந்திருக்கு.. யாரோ கட்டி வுட்ருக்காங்க" என்று அம்மா சொன்னதும்.. அப்போ மாப்பிள்ளை வீரன் தினமும் ...