இஸ்ரோவின் கதையை ஏன் கேட்க வேண்டும்?
இஸ்ரோவின் கதை ஒரு பார்வை..! ஒரு சிறந்த படைப்பு தனக்கான வாசகர்களையும், ரசிகர்களையும் அதுவே உருவாக்கிக்கொள்ளும் என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் நண்பர் ஹரிஹரசுதன் எழுதியிருக்கும் “இஸ்ரோவின் கதை” புத்தகம். தன்னுடைய முதல் ராக்கெட்டை சைக்கிளில் வைத்து எடுத்து சென்ற இஸ்ரோ.. இன்று அண்டை நாடுகளின் செயற்கை கோள்களை ஏவிக்கொடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறதென்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக இந்தியா சிந்திய வியர்வையும் ரத்தமும் மிக அதிகம். துரோகங்களுக்கு மத்தியில் துடிதுடித்து தத்தி தவழ்ந்து எழுந்து நின்று வானூர்தி ஓட்ட கற்றுக்கொண்ட ஒரு குழந்தைபோல் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்த வியப்பூட்டும் விண்வெளிப் பாய்ச்சலையும், அதற்கு முதல் புள்ளியிட்டவர்களிலிருந்து முற்றுப்புள்ளி வைக்க சதி செய்தவர்களையும், PSLV, SSLV, Cryogenic என நம்மிடம் இருக்கும் ராக்கெட் தொழில்நுட்பம் மட்டுமல்லாது, இந்திய அணு ஆராய்ச்சி பற்றியும், சந்திராயன், மங்கல்யான், ககன்யான் என இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களையும் மிக இலகுவாக, ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்த்த உணர்வோடு கடத்துகிறது இந்த புத்தகம். தமிழ் இலக்கிய சூழலில் ...